--- --:--:-- --

பேருந்தில் பிளஸ் டூ மாணவனுக்கும், பாலிடெக்னிக் மாணவனுக்கும் இடையே நடந்த சண்டை..!

11

நெல்லையில் பாலிடெக்னிக் மாணவனை தாக்கிய பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அரசு பேருந்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் படிக்கட்டில் பயணம் செய்ததாக தெரிகிறது.

 

இதனால் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை பேருந்தில் ஏறும்படி சிலர் கண்டித்துள்ளனர். அதே பேருந்தில் பயணம் செய்த பாலிடெக்னிக் மாணவர் ஒருவரும் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலிடெக்னிக் மாணவனை சரமாரியாக தாக்கினர்.

 

பாலிடெக்னிக் மாணவன் கூச்சலிட்டதால் அந்த மாணவர்கள் தப்பி ஓடினர். இது குறித்து காயம் அடைந்த மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தான். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் உட்பட நான்கு பேரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon