இரு சக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..!
ஆவடியில் பெண் காவலர் சென்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் பெண் காவலர் படுகாயம் அடைந்தார். போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் பவித்ரா. இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது அயப்பாக்கத்தில் எதிரே வேகமாக வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பவித்ரா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். மேலும் அந்த கார் அடுத்தடுத்து சொகுசு கார் மற்றும் சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த பெண் காவலரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்குள்ளாகிய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





