திடீரென ஏற்பட்ட வலிப்பு..ஆபத்தில் ஆட்டோ ஓட்டுநர்..!

சென்னையில் தங்க சாலை மேம்பாலத்தில் ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, வள்ளலார் நகர் மேம்பாலத்தின் மீது குறுக்குப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராயபுரம் நோக்கி தனது ஆட்டோவில் வந்திருந்தார்.

 

அப்பொழுது திடீரென ஆட்டோ ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ மேம்பாலத்தில் நடுவில் உள்ள சுவரின் மீது மோதி ஆட்டோ தலைக்குப்புற விழுந்தது. இதனை கண்ட பொதுமக்கள் ஆட்டோவை புரட்டி போட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்த ஓட்டுநரை உடனடியாக மீட்டனர்.

 

அந்த வழியாக சென்ற சென்னை ராயபுரத்தை சேர்ந்த பிசியோதெரபி பெண் மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி வைத்தனர். விபத்தின் போது ஆட்டோவில் பயணிகள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.