வீடு திரும்பாத மூதாட்டி..தோட்டத்தில் கண்ட கொடூர காட்சி..!
தோட்டத்திற்கு சென்ற மூதாட்டி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்துள்ள குடியிருப்பில் பொன்னம்மாள் என்பவரின் வயது 78.
சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்றவர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரைத் தேடி உள்ளனர். அப்பொழுது தோட்டத்திற்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மூதாட்டி சடலமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டாரா என்று கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





