--- --:--:-- --

மச்சினிச்சியையும், மனைவியையும் கொடூரமாக தாக்கிய கணவன்..!

5

ஈரோடு மாவட்டம் தொழிலாளர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். கலைச்செல்வனுக்கு ஜோதிமணி என்ற மனைவி உள்ளார்.

 

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மாலையில் கலைச்செல்வன் வீட்டிற்கு மது போதையில் வந்துள்ளான். இதனால் மனைவி ஜோதிமணிக்கும் கலைச்செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ஜோதிமணி தன் தங்கை கல்பனாவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்து இருக்கிறார்.

 

உடனே வீட்டிற்கு வந்த கல்பனா அக்காவின் கணவரான கலைச்செல்வனை தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கலைச்செல்வன் அருகில் இருந்த கத்தரிக்கோலால் கல்பனாவை குத்தியுள்ளான். மேலும் தடுக்க சென்ற மனைவி ஜோதிமணியையும் குத்தியுள்ளார் கலைச்செல்வன்.

 

இருவரையும் அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது கல்பனா உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. ஜோதிமணி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் உறவினர்கள் கலைச்செல்வனை அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon