--- --:--:-- --

வங்கி வாகனம் மீது மோதி பாய்ந்த அரசு பேருந்து.. கர்நாடகாவில் பரபரப்பு..!

9

கர்நாடகாவில் வங்கி வாகனம் மீது மோதி அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலிருந்து உத்தரகாண்ட் மாவட்டம் படுகர் நோக்கிய அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது.

 

வங்கிக்கு பணம் ஏற்றி சென்ற வாகனம் மீது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளான நிலையில் அருகில் இருந்தவர்கள் பயணிகளை மீட்டனர்.

 

இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon