ஐடி ஊழியர் திடீர் மாயம்.. விசாரணையில் கொலை..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞரை அவரது நண்பர்களை கொலை செய்து மண்ணில் குழி தோண்டி புதைத்தது போலீஸ் விசாரணையில் புலப்பட்டது.
பெங்களூரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விக்னேஷ் தனது வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வந்தார். கடந்த 11-ம் தேதி வெளியே சென்று விக்னேஷ் வீடு திரும்பாததால் அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விசாரணை ஏரி அருகே விக்னேஷ் உட்பட நான்கு பேர் மது அருந்திய பொழுது திடீரென தகராறு ஏற்பட்டது தெரிய வந்தது. விக்னேஷ் எட்டி உதைத்ததால் கோபமடைந்த விசு என்ற விசுவநாதன் அருகே உள்ள தனது வீட்டிற்கு சென்று அறிவாளை எடுத்து வந்து வெட்டியதில் விக்னேஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





