--- --:--:-- --

வகுப்பறையில் பீர் குடித்து மட்டையான ஆசிரியர்..!

6

தெலுங்கானாவில் உள்ள பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பீர் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வீரையா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் நேற்று மது போதையில் பள்ளிக்கு சென்று வகுப்பறையில் பீர் அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் வகுப்பறையில் தரையில் படுத்து புரள ஆரம்பித்துள்ளார். இதனை கண்ட பள்ளி மாணவர்கள் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

 

ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரை துண்டு கட்டாக தூக்கி அருகில் இருந்த மாட்டுக் கொட்டகையில் தூக்கி போட்டனர். வகுப்பறையில் ஆசிரியர் மது அருந்தியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon