மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மருமகன்..!
கேரளாவில் மாமியார் மீது மருமகன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி மாமியார் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி பிரின்சிகா சந்தோஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் தகராறு செய்து வந்துள்ளான்.
மனைவியை பிரிந்து சென்று தாய் வீட்டில் வசித்து வந்திருக்கிறான். இதனிடையே பிரின்சி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில் கடந்த மூன்று மாதமாக அவர் பணம் கொடுக்காததால் ஆத்திரத்தில் இருந்த சந்தோஷ் மாமியார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டிருக்கிறான்.
அப்பொழுது மாமியாரை மருமகன் பெற்றோர் ஊற்றி தீ வைத்து தப்பி ஓடியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேத்தியுடன் படுகாயம் அடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாமியார் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த சந்தோஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும் குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





