சமந்தாவுடன் விவாகரத்து.. 32 வயது நடிகையுடன் நாக சைதன்யா டேட்டிங்..
நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர்.இதன்பின் நடிகர் நாகசைதன்யா பிரபல நடிகை சோபிதா என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வருகிறது.
சோபிதா தமிழில் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நாகசைதன்யா மற்றும் சோபிதா இருவரும் ஒன்றாக இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தன.
ஆனால், இருவருக்கும் இடையே எதுவும் இல்லை என கூறப்பட்டது.பின் இருவரும் சமீபத்தில் டூர் சென்று இருந்தனர். அப்போது இருவரும் தனித்தனியாக ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் கூட வைரலானது. ரசிகர்களும் இருவரும் ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில், சோபிதா மற்றும் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகியுள்ளது. ரசிகர்களின் சிக்கிய இந்த புகைப்படம் தற்போது படுவைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என கேட்டு வருகிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




