--- --:--:-- --

துன்புறுத்திய கணவன்.. கத்தியால் சரமாரியாக வெட்டிய மனைவி..!

6

பூந்தமல்லி அருகே கணவனை குத்திக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார். நசரத்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லக்ஷ்மி ஊர்காவல் படையில் பணிபுரிந்து வந்தார்.

 

இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கம் உள்ள ஸ்ரீநிவாசன் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

கடந்த சனிக்கிழமையன்று குடிபோதையில் வந்து சீனிவாசன் மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. சீனிவாசன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon