--- --:--:-- --

அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலம் மீட்பு..!

9

புதுக்கோட்டை மாவட்டம் பரமக்குடியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஆர்டிஓ விசாரணை நடத்த கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். பரமக்குடி புது குளத்தில் ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு அந்த பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர்.

 

விரைந்து சென்று தடயங்களை சேகரித்து விசாரணை நடத்திய பொழுது வடக்கு தெருவில் கடந்த ஐந்தாம் தேதி காணாமல் போன விஸ்வநாதன் என்பது தெரிய வந்தது. உறவினர்களை அழைத்து விசாரித்த பொழுது விசுவநாதன் என்பது உறுதி செய்யப்பட்டது.

 

விஸ்வநாதனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்த உறவினர்கள் ஆர்டிஓ விசாரணை செய்து உடற் கூராய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை உடலை எடுக்கக் கூடாது என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்களிடம் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon