மது விற்பனை செய்தவரை தட்டி கேட்டவர் கொலை..!

பெரம்பலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை தட்டி கேட்டவுடன் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பாடலூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

 

இதனால் மது வாங்க வருவோர் நள்ளிரவில் வீட்டின் கதவுகளை தட்டுவதாக கூறி அந்த பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவர் சுரேஷிடம் முறையிட்டுள்ளார். ஆனால் மது விற்பனையை நிறுத்தாததால் பாடலூர் காவல் நிலையத்தில் ஆனந்தகுமார் புகார் அளித்துள்ளார்.

 

அங்கு உரையாட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் அவர் புகார் அளித்துள்ளார். சுரேஷ் ஆனந்த குமாரை கருக்கல் கடப்பாறை கொண்டு தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

 

தகவலறிந்து சென்று காவல்துறையினர் சுரேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்தனர். சட்டவிரோத மது விற்பனை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தனது கணவரை இழந்துள்ளதாக ஆனந்த குமாரின் மனைவி வேதனையோடு தெரிவித்துள்ளார்.