கல்லூரி பேராசிரியரை தாக்கி நகை, பணம் கைபேசியை பறித்து சென்ற கும்பல்..!
சேலத்தில் கல்லூரி பேராசிரியரை தாக்கி நகை, பணம் உள்ளிட்டவற்றைப் பறித்து சென்ற கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். குமாரபாளையத்தை சேர்ந்த பேராசிரியர் பாலசுப்ரமணியம் என்பவர் கருத்து வேறுபாட்டால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி சக்திவேல் என்பவரிடம் உதவி கேட்டு அதற்காக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளாத சக்திவேலிடம் தான் கொடுத்த பணத்தை பாலசுப்பிரமணியன் திரும்ப கேட்டுள்ளார். அப்பொழுது ரமேஷ் என்பவரிடம் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சக்திவேல் கூறியதை நம்பி எடப்பாடிக்கு சென்ற பாலசுப்பிரமணியத்தை கும்பல் தாக்கியுள்ளது.
மேலும் அவர் அணிந்திருந்த நகை மற்றும் பணம், கார், கைப்பேசி உட்டவற்றைப் பறித்துக் கொண்டு தப்பி சென்றது. இது குறித்த புகாரின் பேரில் ரமேஷ் உட்பட ஐந்து பேரை கைது செய்த காவல்துறையினர் நகை பணம் கார் கைப்பேசி ஆகியவற்றை மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





