ஓய்வு பெற்ற கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை..!
சென்னையில் உள்ள ஓய்வு பெற்ற கனிமவளத்துறை அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பெரம்பூரில் இளவரசி என்பவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஓய்வு பெற்ற கனிமவளத்துறை அதிகாரியான இவர் சதீஷ்கர் மாநிலம் கனிமவளத்துறை மேலாளராக பணியாற்றியவர் இளவரசன். பணியில் இருந்த பொழுது கனிமவளத் துறை தொடர்பான டெண்டர் வழங்குவதில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியது.
தொடர்ந்து இளவரசன் மற்றும் அவரது மனைவி சாந்தியை சென்னை சிபிஐ அலுவலகம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பிறகு இளவரசனுக்கு முறைகேட்டில் தொடர்பு உள்ளதா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





