எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆற்று பாலத்தில் எலக்ட்ரிக் பைக்கில் வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் நிலை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆற்றுக்குள் விழுந்த ஆத்தூரைச் சேர்ந்த இசக்கி பாண்டியன் என்ற முதியவரையும் அவரின் பைக்கையும் சக வாகன ஓட்டிகள் ஆட்டோவில் கயிறு கட்டி மீட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கடந்த மழை வெள்ளத்தின் பொழுது சேதமடைந்து உயர்மட்ட பாலத்தை விரைவில் சீரமைத்து தரும்படி அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





