திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயரை கொண்ட நபர் அதே தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பிறகு மனு தாக்கல் செய்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நேருவின் மகனான கே.என்.அருண் நேரு வேட்புமனு அளித்துள்ளார். இந்நிலையில் கட்டிட பொறியாளர் அருண் நேரு என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை வழங்கினார்.
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





