மோடி மோடி என முழங்கும் இளைஞர்களை அறைய வேண்டும் : சிவராஜ்
மோடி மோடி எனவே முழங்கும் இளைஞர்களை கன்னத்தில் அறைய வேண்டும் என பேசிய கர்நாடக அமைச்சர் சிவராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவராஜ் மோடி அரசு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என விமர்சித்தார்.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பை கொடுப்பதாக உறுதி அளித்த பாஜக அதற்குள் செய்ததா என கேள்வி எழுப்பிய அவர் மாநில மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எவரேனும் மோடி மோடி என முழங்கினால் அவர்களின் கன்னத்தில் அறைய வேண்டும் என கூறினார்.
இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் ராகுல் காந்தி நிராகரித்ததால் இவ்வாறு பேசலாமா என பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் கேள்வி எழுப்பினார். இளைஞர்களுக்கு எதிராக செயல்படும் எந்த கட்சியும் நிலைத்ததில்லை எனவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





