நடிகை கௌதமி அளித்த நில மோசடி புகார்..சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நடிகை கௌதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் பதிவான வழக்கில் பாஜக பிரமுகர் அழகப்பனின் மனைவி மற்றும் மருமகளுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2004ல் நிலம் வாங்கிய விவகாரத்தில் தன்னை மோசடி செய்ததாக நடிகை கௌதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் அவரது மனைவி மற்றும் மருமகள் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரிய மனுவை விசாரித்த நீதிபதி அழகப்பனின் மனைவி மற்றும் மருமகள் ஆர்த்தி ஆகியோருக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். மேலும் விசாரணை அறிக்கையை ஏப்ரல் ஐந்தாம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் எட்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





