மனைவி குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்..!
கேரள மாநிலம் கோட்டயத்தில் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை கொன்று கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டையம் பகுதியை சேர்ந்த ஜெய்ண்ட் தாமஸ் என்பவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருந்தன. ஓட்டுனராக பணிபுரிந்து வந்த தாமஸ் நள்ளிரவு நேரத்தில் குடும்ப புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
அதிகாலை வேலையில் உறவினர் ஒருவர் வீட்டிற்கு சென்று .பார்த்த பொழுது தாமஸ் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கையில் சடலமாகவும் கடந்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் மனைவி கழுத்தை அறுத்தும் மூன்று குழந்தைகளின் முகத்தில் தலையணையை அழுத்தி கொலை செய்துவிட்டு தாமஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் ஐந்து பேரின் உடல்களையும் இன்று பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





