கைநழுவி கழுத்தை அறுத்த கட்டிங் மெஷின்..!
சென்னை நீலாங்கரையில் வேலை செய்த பொழுது கை நழுவி கட்டிங் மெஷின் கழுத்து பகுதியை எடுத்ததால் பரிதாபமாக கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம் என்ற 44 வயது கூலி தொழிலாளி வைத்தியலிங்கம் சாலையில் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
பிளாஸ்டிக் ட்ரம்மின் மேல் மூடியை கட்டிங் மிஷினை கொண்டு அறுத்துக் கொண்டிருந்த பொழுது கை நடுவில் கட்டிங் மெஷின் செல்வத்தின் கழுத்து பகுதியை அறுத்துள்ளது. அதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





