--- --:--:-- --

வீடு புகுந்து ஓனரை வெட்டி வீசிய நண்பர்கள்..!

8

தூத்துக்குடியில் முன் விரோதம் காரணமாக பேண்ட் வாத்திய கலைஞரை நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் பேண்ட் வாத்தியம் வைத்து தொழில் செய்து வருகிறார்.

 

அவருடன் ராஜா நவீன் ஆரோன் ஆகியோரம் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளனர் கடந்த ஒரு வருடத்திற்கு முன் அந்த பகுதியின் நடைபெற்ற கோயில் திருவிழாவின்பொழுது கருப்புசாமி குமரது நண்பர்கள் ஆன ராஜா நவீன் ஆரோன் ஆகியோர் ஆகியோருக்கிடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதன் மூவரும் சேர்ந்து கருப்புசாமி அறிவாளால் வெட்டிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார் இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கருப்பசாமி நீதிமன்றத்தில் ஆஜராகி அவர்கள் மூவருக்கும் எதிராக சாட்சி சொல்லுவதாக கூறப்படுகிறது.

 

அதனால் ஆத்திரமடைந்த ராஜா, ஆரோன் உள்ளிட்டோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கருப்பு சாமியை பட்டப்பகலில் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon