--- --:--:-- --

whatsappப்பில் ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்த பெண்..!

3

வேலூர் அருகே திருமணமான பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அணைக்கட்டு அருகே உள்ள கீழ் கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் என்பவருக்கும் திருவண்ணாமலையைச் சேர்ந்த மீனாட்சி என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

 

மீனாட்சியின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடந்ததாக கூறப்படும் நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் பிரச்சனை ஏற்படவே மனமுடைந்த மீனாட்சியை வீட்டில் யாரும் விடாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய நிலையில் இறப்பதற்கு முன்பாக மீனாட்சியளித்த கடிதத்தையும் எடுத்தனர். அதில் தன்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் இறந்து போன தந்தையிடமே நிம்மதியை தேடிச் செல்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

முதலில் மீனாட்சி தற்கொலை செய்வதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்பாக தனது கணவருக்கு whatsapp மூலம் ஆடியோ ஒன்றை அனுப்பிய நிலையில் இறப்பினல் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon