சவுக்கு சங்கர் பெயரில் போலியாக பரபரப்பு பதிவு..!
கன்னியாகுமரியில் அரசியல் தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை விமர்சித்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வந்த சவுக்கு சங்கர் என்ற பெயர் கொண்ட சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
அந்த முகநூல் பக்கத்தில் முக்கிய பிரமுகர்களை கடுமையாக விமர்சித்து கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சவுக்கு சங்கருக்கும் இந்த பக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லாத நிலையில் குமரி மாவட்டத்தை சேர்ந்த மர்ம நபர் ஒருவர் அந்த பெயரை பயன்படுத்தி முகநூல் பக்கத்தை உருவாக்கி வந்தது தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





