--- --:--:-- --

விதிமீறலை கண்டித்த காவலர்.. கைவிரல்களை கடித்த இளைஞர்..!

2

கர்நாடக மாநிலத்தில் சாலை விதியை மீறி இளைஞரை தடுத்து நிறுத்திய பொழுது போக்குவரத்து காவலரின் கையை அவர் கடித்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. பெங்களூரு வில்சன் கார்டன் பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்பொழுது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். மேலும் அவரை போக்குவரத்து காவலர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றார்.

 

அப்பொழுது அந்த இளைஞர் காவலர் உடன் வாக்குவாதம் செய்ததோடு அவரது கையை  கடித்தார். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon