--- --:--:-- --

பிரதான சாலையில் ஓடும் பஸ்ஸில் இருந்து விழுந்த நபர்..!

9

பரமக்குடியில் ஓடும் பேருந்திலிருந்து மாற்றுத்திறனாளி ஒருவர் தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று மதுரைக்கு சென்றுள்ளது. இதில் பரமக்குடி அருகே இலந்தை குலத்தை சேர்ந்த மாற்றித் திறனாளி ராஜேந்திரன் ஏறியுள்ளார்.

 

அவர் பேருந்தின் பின் படிக்கட்டில் நின்றபடி சென்ற பொழுது தவறி விழுந்தார். அவருக்கு தற்பொழுது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் கீழே விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon