--- --:--:-- --

பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட காவலர்..!

5

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த சபரிகிரி தற்போது சிறப்பு நுண்ணறிவு பிரிவிற்கு பணியிட மாறுதல் பெற்று விடுப்பில் உள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பொள்ளாச்சி அருகே பகுதியில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

 

விசாரணையில் தலைமை காவலர் சபரி கிரி செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து ஏழரை சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon