மக்கள் தேச கட்சி மாவட்ட செயலாளர் கொலை வழக்கு.. ஐந்து பேர் நீதிமன்றத்தில் சரண்..!
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே மக்கள் தேச கட்சி மாவட்ட செயலாளர் கொலை செய்யப்பட்டிருக்கும் வழக்கில் 55 பேர் ஆறு குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சரணடைந்தனர்.
காவேரிப்பாக்கம் அருகே அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவேகானந்தர் மக்கள் தேச கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் விவேகானந்தர் இருசக்கர வாகனத்தில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அவரை காரில் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்து வெட்டி கொலை செய்தது.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் விவேகானந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் விவேகானந்தரை கொலை செய்த வழக்கில் ஒரு பகுதியை சேர்ந்த பாமக இளைஞரணி செயலாளர் கோபி, ராஜேஷ், தாமோதரன், சந்துரு, சூர்யா உள்ளிட்ட ஐந்து பேர் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் சரணடைந்தனர்.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் குற்றவாளி ராஜேஷின் சகோதரர் ஆன இளவரசனை விவேகானந்தர் தனது கூட்டாளிகளோடு கொலை செய்ததாகவும் பழிக்கு பழி வாங்கவே விவேகானந்தனை கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





