கல்யாணம் செய்து கைவிட்ட காதலன்.. தாய், பாட்டியுடன் தர்ணா..!
காதல் திருமணம் செய்துவிட்டு பிரிந்து சென்ற கணவனிடம் சேர்த்து வைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினரிடம் சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி அருகே ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த யமுனா என்ற கல்லூரி மாணவி அதே கல்லூரியில் படிக்கும் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த இருவரும் கடந்த அக்டோபர் மாதம் திருத்தணி முருகன் மலை கோயிலில் அருகே யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே கடந்த சில நாட்களாக அவர் பேசுவதை நிறுத்தியதுடன் அது குறித்து கேட்ட பொழுது கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் மற்றும் பாட்டியுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





