சாக்கடை கால்வாய் அமைப்பதில் தகராறு..!
தர்மபுரி அருகே சாக்கடை கால்வாய் அமைப்பதில் நடந்த தகராறில் கத்தியால் குத்தியதில் உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி அருகே மதத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த உடற்பயிற்சி நிலைய உரிமையாளர் சிவ பிரகாசம் என்பவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இடையே புதிதாக சாக்கடை கால்வாய் அமைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் மீண்டும் பிரச்சனையை தொடங்க மதுபோதையில் இருந்த வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவப்பிரகாசத்தை கத்தியால் குத்தினார். இந்த நிலையில் அவரை அக்கம் பக்கத்தினர் மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்று நிலையில் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் தலைமறைவாகியுள்ள வெங்கடேசனை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் அரசு மருத்துவமனையில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





