--- --:--:-- --

சோதனைக்கு சென்று அதிகாரிகளை ஓட ஓட விரட்டி அடிக்க முயன்ற வட மாநிலத்தவர்கள்..!

7

பழனியில் வடமாநில தொழிலாளர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதால் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்காக சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை வட மாநில தொழிலாளர்கள் தாக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

மேலதாளம், பூங்கொத்துகள், சாமி சிலைகளை தயாரித்து வியாபாரம் செய்வதற்காக வட மாநில தொழிலாளர்கள் பழனி அருகே உள்ள சிவகிரி பட்டி ஊராட்சி அலுவலகம் பகுதியில் காலியிடங்களில் தற்காலிக குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை உள்ளூர் வியாபாரிகளுக்கு வட மாநில தொழிலாளர்கள் மொத்தமாக விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் அவர் சோதனைக்கு சென்றுள்ளார்.

 

அப்பொழுது சரவணன் வடமாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்க முயற்சித்ததாகவும் அவர் தப்பியோடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon