--- --:--:-- --

திருப்பூரில் முதலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!

திருப்பூரில் முதலாளியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு, 15 வேலம்பாளையம் பகுதியில் இன்பவளவன் வசித்து வந்துள்ளார். இவர் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் குடியிருந்து வந்த வீட்டில் அழுகிப்போன நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

 

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகன் மகேந்திரன் (39) என்பவர் சம்பள பிரச்சனை தொடர்பாக தனது ஓனரான, இன்பவளவன் என்பவரை கொலை செய்தது தெரியவந்தது.

 

இது தொடர்பாக 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. மகேந்திரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கு விசாரணையில் இருந்து வந்தது. இந்த வழக்கு நேற்று  திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

அனைத்து தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்து, குற்றவாளியான மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ.2,000 விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.

 

இவ்வழக்கினை கையாண்ட புலன்விசாரணை அதிகாரியான அப்போதிருந்த காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் பதுருநிஷா பேகம், தற்போதைய காவல் நிலைய ஆய்வாளர் தாமோதரன் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த காவல் ஆளினர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநபு வெகுவாக பாராட்டினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon