--- --:--:-- --

மூன்று ரசிகர்களின் உயிரை காவு வாங்கிய நடிகர் யாசின் பிறந்தநாள் பேனர்..!

10

கர்நாடகாவில் நடிகர் யாஷ் இன் பிறந்த நாளை ஒட்டி பேனர் வைக்க முற்பட்ட பொழுது பேனரில் இருந்த கம்பி மேலே சென்று கொண்டிருந்த மின் கம்பியில் உரசி மூன்று பேர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவின் கட்டக் மாவட்டம் லட்சுமிஸ்வரர் தாலுகாவில் உள்ள சுரங்கி கிராமத்தில் நடிகர் யாசின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் கட்டவுட் வைத்து மாலைகள் அணிவித்து பாலாபிஷேகம் செய்து கொண்டாட முடிவு செய்து இருந்தனர்.

 

இதற்காக புதிதாக பேனர்களை செய்து சுடலை கிராமத்தில் நேற்று இரவு வைக்க முற்பட்ட பொழுது மேலே சென்ற மின் கம்பி உரசியது. இதில் பேனரை பிடித்திருந்த நான்கு பேர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த மூன்று பேரும் பலியாகியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon