புதுச்சேரி கடலில் மாயமான 4 பேர்.. கரை ஒதுங்கிய சிறுமியின் உடல்..!
புதுச்சேரியில் கடலில் குளிக்க சென்று மாயமான மாணவ மாணவிகளை பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது உடல் அரியாங்குப்பம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது. புதுச்சேரி நெல்லிக்கா குப்பையை சேர்ந்த சீனிவாஸ் என்பவரது 17 மற்றும் 15 வயது மகள்கள் மோகனா மற்றும் ரேகா.
இவர்கள் இருவரும் கடற்கரையில் தங்களது நண்பர்களான பத்தாம் வகுப்பு மாணவர் நவீன் மற்றும் கிஷோர் ஆகியோருடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது மாயமானவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தேடி வந்தனர்.
மாணவியின் உடல் கரை ஒதுங்கிய தகவலறிந்து சென்ற போலீசார் ரேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





