--- --:--:-- --

முதல்வரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்த பாஜக நிர்வாகி..!

5

தமிழக முதலமைச்சரின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட புகாரில் கரூர் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் அடுத்த பணையம் பாளையம் பகுதி சேர்ந்த முருகேசன் என்பவர் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இதில் முகநூல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தகவல் தொழில்நுட்ப மாவட்ட தலைவர் புகைப்படங்களை தவறாக சித்தரித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon