--- --:--:-- --

ஆண்கள் 2 திருமணம் செய்வது கட்டாயம்..!

4

இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்கள் இரண்டு திருமணம் செய்ய வேண்டுமாம். உலகின் பல்வேறு பகுதிகளில் எத்தனையோ விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. அந்த வகையில், இந்திய கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த நிகழ்வும் அதற்கான காரணங்களும் விசித்திரம்தான்.

 

பல சுவாரசியமான கதைகள், ஆச்சரியமான கதைகள் என அடுக்கடுக்காக பல கதைகள் மறைந்துள்ளன. எத்தனையோ பழக்கவழக்கங்கள் மக்களை சிந்திக்க வைக்கின்றன. இங்கே அத்தகைய ஒரு கிராமத்தைப் பற்றி அறிவது முதல் பார்வையில் நம்பமுடியாததாக தோன்றலாம். ஆனால் அது உண்மைதான்.

 

அந்த கிராமம் எங்கே இருக்கிறது? இந்த கிராமத்தில் ஆண்கள் இரண்டு முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். இதுதான் வழக்கம். ஆனால் கல்யாணம் வேண்டாம் என்றால் ஊரை விட்டே துரத்தி விடுவார்களாம். அப்படிப்பட்ட இந்த கிராமம் இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த கிராமம் ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தது.

 

இந்த சிறிய கிராமத்தின் பெயர் தேராசர். இங்கு சுமார் 600 பேர் வசிக்கின்றனர். ஒவ்வொரு தேராசர் ஆணுக்கும் குறைந்தது இரண்டு மனைவிகள் உள்ளனர். இது விசித்திரமாகத் தோன்றினாலும், இந்த வழக்கத்திற்குப் பின்னால் உள்ள காரணத்தைத் தெரிந்துகொள்வது இன்னும் விசித்திரமாகவோ ஆச்சரியமாகவோ இருக்கும்.

 

இந்த தேராசர் கிராமத்தில் வசிப்பவர்கள் முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்று நம்புகிறார்கள். குழந்தை பெற்றெடுக்க வேண்டுமானால், இரண்டாவது திருமணம் செய்ய வேண்டும். இந்த விசித்திரமான நம்பிக்கையால், இந்த கிராமத்து ஆண்கள் முதல் திருமணத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

 

இதற்குப் பின்னால் ஒரு கதை உள்ளதாக அவர்களே சொல்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால், இக்கிராமத்தில் ஒருவருக்கு குழந்தை இல்லை. பின்னர் அவருக்கு இரண்டாவது திருமணத்தில் குழந்தை பிறந்தது. அதன்பின், இதேபோன்ற சம்பவம் தொடர்ந்து அந்த கிராமத்தில் உள்ள நபர்கள் பலருக்கு நடந்தது. அன்றிலிருந்து கிராமத்தில் இரண்டாவது திருமணம் செய்யும் வழக்கம் தொடங்கியதாகச் சொல்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon