--- --:--:-- --

மனைவி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவன்..!

8

ஈரோட்டில் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நெஞ்சுவலியால் இறந்ததாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்டார். ஈரோடு பகுதியை சேர்ந்த லீலா கிருஷ்ணன் – ஸ்ரீ ஆகியோருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

 

டிரைவர் ஆன கிருஷ்ணனுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீஜாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி அவருடைய கணவர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

 

இது குறித்து மருத்துவர்கள் வழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 

அப்பொழுது மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணன் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்வதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon