--- --:--:-- --

திடீரென திரும்பிய கார்.. அசுரவேகத்தில் பல்டி அடித்த பைக்..!

7

சத்தியமங்கலத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் தூக்கி வீசப்பட்டனர். சத்தியமங்கலம் கோவை சாலையில் கார் ஒன்று, சாலையோரம் இருந்து மையப்பகுதிக்கு திரும்பியது.

 

அப்பொழுது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிலையில் காரின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்திற்கு உள்ளானது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

 

அந்த பகுதியில் காவல்துறை சார்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon