அதே பேருந்து, அதே இடத்தில் மீண்டும் விபத்து..!
கோவை கருமத்தம்பட்டி அருகே அதிவேகமாக வந்த தனியார் பேருந்து கல்லூரி மாணவியின் இன்றைய விபத்து ஏற்படுத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த செம்மாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் வையாபுரி மற்றும் வசந்தி தம்பதியினர்.
இவர்களது மூன்றாவது மகள் தேவதர்ஷினி, சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது சோமனூரில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து வளைவில் திரும்பிய பொழுது அந்த வழியாக சென்ற தேவதர்ஷினி மீது மோதியதில் அவர் சாலையோரையும் இருந்த புதரில் தூக்கி வீசப்பட்டார்.
இதில் காயமடைந்த தேவதர்ஷினி அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தேவதர்ஷினி பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கருமத்தம்பட்டி காவல் துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் இந்த தனியார் பேருந்து இதே இடத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





