மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கியது..!
சென்னையில் இருந்து சுமார் 190 கி.மீ. தூரத்திற்கு மிக்ஜாம் புயல் விலகி சென்றது. நெல்லூருக்கு வடக்கு – வடகிழக்கு 30 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நெல்லூர் பகுதியில் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 29% அதிகமாக பதிவாகியுள்ளது – வானிலை ஆய்வு மையம்சென்னையில் இருந்து வடக்கே 200 கி.மீ மிக்ஜாம் புயல் சென்றுள்ளது.
பலத்த காற்றுடன் ஆந்திர மாநிலம் காவலி கடல் கரையோரம் மிக்ஜாம் புயல் கரையை கடந்து வருகிறது. புயல் முழுமையாக கரையை கடக்க 3 மணி நேரமாகும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. படிப்படிப்படியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்து எண்ணிக்கைக்கு பேருந்துகள் இயக்கி வைக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 1000 பேருந்துகள் வரை இயக்கப்பட உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




