--- --:--:-- --

தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை இல்லையா..?

10

மிக்ஜாம் புயல் காரணமாக, வட தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று பொதுவிடுமுறை விடுக்கப்பட்டிருந்தது.

 

இந்த நிலையில், கனமழை தொடரும் என்பதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே வேளையில், பால் விநியோகம், உணவகம், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் தொய்வின்றி நடைபெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இதனிடையே, நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பணியாளர்களை முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்ற தனியார் நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அத்தியாவசியமாக தேவைப்படும் பணியாளர்களை மட்டும் வரவழைத்து நிறுவனங்கள் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

முன்னதாக, மழை பாதிப்புகள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை மேற்கொண்டார். கனமழை மற்றும் மிக்ஜாம் புயல் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon