புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார்..!
புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி அனைத்து வகையிலும் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளிடம் பேசியவர் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
மழை நீரை வெளியேற்றும் வகையில் மண்டல வாயிலாக மோட்டார் பம்புகள் அனுப்பப்படும் என்றும் இரவு நேரத்தில் 16,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த இரண்டு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் பலத்த காற்றில் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களை கண்டறிந்த முன்கூட்டியே அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மேயர் பிரியா கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





