பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!

ட்டப்பிடாரத்தில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் தெருக்களில் வீலிங் செய்த மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிரதீப்குமார் தெருகளில் அதிவேகமாக வீலிங் செய்ததாக கூறப்படுகிறது.

 

அந்த வழியாக வந்த மூதாட்டி செண்பகத்தம்மாள் மீது மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அந்த பகுதி மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.