--- --:--:-- --

திருமணமான மறுநாளே பலியான புது பெண்..!

3

சேலத்தில் திருமணம் ஆன மறுநாளே புது பெண் உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. செல்லாந்தி வலசு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும் எடப்பாடியை சேர்ந்த சுதாவிற்கும் கடந்த 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

 

வெள்ளியன்று மாலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறி சுதாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பொழுது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

திருமணத்திற்கு முன்பே மூச்சு பாதிப்பிற்காக சுபா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

திருமணத்திற்காக போடப்பட்ட மணப்பந்தலை கூட பிரிக்காத நிலையில் மணமகள் இறந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon