பள்ளி நிகழ்ச்சிக்கு வந்த போலீசிடம் புகார் அளித்த மாணவிகள்..!
பள்ளியில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்ற போலீசாரிடம் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ஆசிரியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். நெல்லையில் உள்ள கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 19க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெல்லை மாநகர காவல்துறை சார்பாக அந்த பள்ளிக்கு போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில் தனியாக வந்த 5 மாணவிகள் ஆசிரியர் ஜோசப் செல்வன் என்பவர் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தியதில் மாணவிகள் அளித்த புகார் உண்மை என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





