--- --:--:-- --

கேரள தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

5

கேரள செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள செயலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என அவசர காலநிலை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார்.

 

இதனை தொடர்ந்து கேரளா தலைமையகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை போலீசார் தீவிரசோதனை நடத்தினார். சோதனையில் எதுவும் கிடைக்காததால் விடுக்கப்பட்ட மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது.

 

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் போனில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தார். கடந்த வாரம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு 11 வயது சிறுவனால் மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon