திடீரென்று பாறைக்குள் சிக்கிய கால்.. துடிதுடித்த பெண்..!
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 10 பேர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகனப்பகுதியில் உள்ள சுற்றுலா தளத்தில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது புக்சீனா என்ற பெண் நடந்து செல்லும் பொழுது பாறைகளுக்கு இடையே அவரது கால் சிக்கியது. அவரை மீட்க முடியாத நிலையில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் கடும் முயற்சி மேற்கொண்டு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





