திமுக மூத்த தலைவருக்கு கி.வேணு காலமானார்..!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவும் கட்சியின் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான கும்மிடிப்பூண்டி கி.வேணு உடல் நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 74; கடந்த 2020 ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அடிக்கடி உடல்நிலை குறைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீண்டும் கடந்த ஒரு மாதமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கும்முடிபூண்டியை அடுத்த பண்பாக்கத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





