பாத்ரூம் போவதாக கூறிவிட்டு தப்பிய கைதி..!
சென்னை புழல் அருகே சிறையில் அடைப்பதற்காக அழைத்துவரப்பட்ட நபர் சிறுநீர் கழிக்க வேண்டும் எனக் கூறி தப்பி சென்றார். திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த இரட்டைமலை சீனிவாசன் என்பவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினீர் வெளியே வந்தார்.
வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததால் அவர் மீது நீதிமன்ற பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதனிடையே இரட்டைமலை சீனிவாசனை கைது செய்த போலீசார், அப்போது சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறிய இரட்டைமலை சீனிவாசன் போலீசாரின் கைகளை தட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தப்பி ஓடியவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





