கொட்டிக்கிடந்த நெல்மணிகளுக்காக திசையை மாற்றிய வண்டி.. அடுத்த நிமிடமே நிகழ்த்த விபத்து..!
தஞ்சாவூர் அருகே விபத்தில் சிக்கி கால்வாயில் விழுந்து காரில் இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகன ஊழியர்கள் மீட்டனர்.
அய்யம்பேட்டையை சேர்ந்த நடராஜன் என்பவர் தனது குடும்பத்தினருடன் கோயம்புத்தூருக்கு சென்று கொண்டிருந்த பொழுது கரும்பை அருகே விபத்தில் சிக்கியுள்ளார்.
சாலையின் இடது புறம் நெல் மணி இருந்ததால் வலது புறமாக சென்ற பொழுது எதிரே வந்த லாரி மீது மோதுவதை தவிர்க்க காரை திருப்பியதில் சாலையோரம் இருந்த கால்வாயில் கார் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்பொழுது அந்த வழியாக நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஊழியர்கள் காரில் இருந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





